undefined

ஜெட் வேக உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.1.14 லட்சத்தைக் கடந்து விற்பனை!

 

கடந்த சில தினங்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரின் இல்லத் திருமண விசேஷங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.

இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு கிராம்ரூ.14,250 நேற்றைவிட ரூ.350 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000 (நேற்றைவிட ரூ.2,800 உயர்வு).

நேற்று ஒரே நாளில் விலை இரண்டு முறை உயர்ந்தது. காலையில் ரூ.1,280 உயர்ந்த நிலையில், மாலைக்குள் மொத்தமாக ரூ.3,600 உயர்ந்து சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் விலை எகிறியுள்ளது.

தங்கம் விலையில் பெரும் மாற்றம் இருந்தாலும், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.340. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்து வரும் புதிய வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் உலக அளவில் டாலரின் மதிப்பு ஊசலாட்டத்தில் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர்.

வெனிசுலா கப்பல்கள் பறிமுதல் மற்றும் நைஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் சர்வதேச அளவில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் மீதான தேவையை அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!