undefined

பெற்ற குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்! சென்னையில் பரபரப்பு!

 

சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி(19) என்ற இளம்பெண், துணி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வருண்(20), என்பவருடன் காதல் ஏற்பட்டது. காதலர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.

காதலிக்கும் போதே இருவரும் உல்லாசமாக இருந்ததால், விஜயலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்த விஜயலட்சுமி பெற்றோர், வருணின் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் கூடுவாஞ்சேரி பகுதியில் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் வருணுக்கு திருமணம் ஆன விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் விஜயலட்சு, குழந்தையுடன் வீட்டிற்கு செல்ல அச்சப்பட்டு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தனது நண்பன் வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு விஜயலட்சுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்‌.

அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தனது பெற்றோரிடம் தருண் கூறினார். அப்போது, அதிர்ச்சி அடைந்த வருணின் பெற்றோர் பிறகு சமாதானமாகி இருவரையும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் வருணின் பெற்றோரிடம் குழந்தை இருப்பதை இருவரும் கூறாமல் இருந்துள்ளனர். விஜயலட்சுமியிடம் குழந்தை நண்பனின் வீட்டில் பாதுகாப்பாக வளரட்டும், விரைவில் தனது பெற்றோரிடம் கூறி அதன் பின் குழந்தையை எடுத்து வருவதாக வருண் கடந்த 3 மாதங்களாக கூறி வந்துள்ளார்.

இதனிடையே, உடனடியாக தன் குழந்தையை பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி வருணிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது தான் வருணின் பெற்றோருக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. அதன்படி குழந்தை குறித்து வருணிடம் பலமுறை கேட்டும் அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி போலீசாரிடம் புகார் அளித்தார். 

அந்த புகாரின் அடிப்படையில் வருணை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது குழந்தையை கொன்று கூடுவாஞ்சேரி பெருமாட்டு நல்லூர் சுடுகாடு அருகே புதைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு 4 மாத ஆண் குழந்தை புதைத்த இடத்தை தோண்டி பார்த்த போது எலும்புக்கூடு மட்டுமே சிக்கியது. அதை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்