undefined

லேட்டா வந்த கணவன்... ஆத்திரத்தில் ஒரு வயது மகளைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தாய்!

 

தினக்கூலித் தொழிலாளியான கணவரின் காலதாமத வருகை, ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ளது.

லத்தூர் மாவட்டம் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது தொழிலாளி ஒருவருக்கும், அவரது 30 வயது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை இரவு, அந்த நபர் வேலை முடிந்து வழக்கத்தை விடத் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அவரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டையின் உச்சகட்டமாக, தனது கோபத்தைப் பிஞ்சு குழந்தை மீது காட்டிய அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது ஒரு வயது மகளின் முகம், வயிறு, கை மற்றும் தலை என உடல் முழுவதும் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த ஒரு வயதுக் குழந்தை, எவ்வித சிகிச்சையுமின்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தனது கண் முன்னே மகளைக் கொன்ற மனைவி மீது, அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக லத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!