undefined

 கூட்டணி ஆட்சி விவகாரம் சூடு… ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் பதில்!

 
 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பொருந்தாது என்றும், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர், கூட்டணி ஆட்சியா அல்லது ஒரே கட்சி ஆட்சியா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் 2006ஆம் ஆண்டு மக்கள் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாதது தவறு என்றும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டிலும் மக்கள் அதனை ஏற்க தயாராக உள்ளனர் என கூறினார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தமிழகம் மட்டும் ஏன் ஏற்காது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!