undefined

50  சொகுசு கார்கள்...  ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐடி நிறுவனம்.. !

 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த ஐ.டி. நிறுவனம் தங்களது நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர்களில்  50 பேருக்கு 50 கார்களை பரிசளித்துள்ளது. இந்த பரிசு  அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 இது குறித்து நிறுவன உரிமையாளர் , ஊழியர்கள் தாங்கள் விரும்பும் காரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தார்.  இதனையடுத்து ஊழியர்கள் விரும்பிய கார்களின்  பட்டியலை   அவரிடம் தெரிவித்துள்ளனர்.  இதன்படி உடனடியாக ஊழியர்கள் 50 பேருக்கும் அவரவர் விரும்பிய கார்களை நிறுவனத் தலைவர் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.அத்துடன் தங்களுடைய ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும்  38 ஊழியர்களுக்கு 33 சதவீதம் பங்குகளை ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றி அறிவித்துள்ளார்.

இது தான் புத்தாண்டு பரிசு என  ஊழியர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.   கடந்த ஆண்டும் 100 ஊழியர்களுக்கு கார்களை இந்த நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நிறுவன ஊழியர்கள்  ‘எங்கள் நிறுவனம்  அவ்வப்போது இதுபோன்ற பரிசுகளை அறிவித்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இது எங்களுக்கு  மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.  இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!