undefined

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது... அதிகாலையில் குவிந்த பக்தர்கள்!

 

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்குரிய தலமாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ விமரிசையாக நடைபெற்றது.

ரூ.29 கோடி மதிப்பில் திருப்பணிகள் நிறைவடைந்த இந்தக் கோயிலில், இன்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் மேள தாளங்கள் முழங்க கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சரியாக காலை 6.10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்றபோது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி, ஆலய வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தக்குளம் அருகே பிரம்மாண்டமான நவகுண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டது. இதில் 170 சிவாச்சாரியார்கள் மற்றும் 170 வேத விற்பன்னர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து யாகசாலை பூஜைகளை நடத்தினர். டிசம்பர் 4-ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள், டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் விசேஷ சந்தி யாக பூஜைகளாகத் தொடர்ந்தன. 30-க்கும் மேற்பட்ட ஓதுவார் மூர்த்திகள் பக்க இசைக்கலைஞர்களுடன் திருமுறைப் பாராயணமும் பாடினார்கள்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்.பி. கே. சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!