undefined

மதம் மாற வற்புறுத்திய கள்ளக்காதலன்.. இளம்பெண் தற்கொலை!

 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், தன்னுடன் கள்ளக்காதலில் இருந்த ஒரு நபர் மதம் மாறும்படி வற்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா கோனகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகவ்யா வந்தமுரி (28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மெகபூப் சாப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.

இதனை நாகவ்யாவின் கணவர் கண்டித்தும், அவர் கள்ளக்காதலைக் கைவிடவில்லை. இதையடுத்து, நாகவ்யா தனது கணவரைப் பிரிந்து சென்று, கள்ளக்காதலன் மெகபூப் சாப்புடன் ராமதுர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்தச் சூழலில், மெகபூப் சாப், நாகவ்யாவை மதம் மாறும்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மதம் மாறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த நாகவ்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ராமதுர்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து, மெகபூப் சாப் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!