வீடியோ வெளியிட்ட அமைச்சர் ... கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜியின் தற்போதைய உடல்நிலை!
சென்னையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷை கொலை முயற்சி, ஆபாசமாகப் பேசுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவர் பழைய நிலைக்குத் திரும்புவதால் மா.சுப்பிரமணியன் அவருக்கு தன்னுடைய கைகளைக் கொடுத்து முழுவதுமாக குணமடையவேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அது மட்டுமின்றி, அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால் இன்று மதியம் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!