ஜனவரி 1 முதல் 13 ரயில்களின் எண்கள் மாற்றம்… !
திருநெல்வேலி–திருச்செந்தூர், மதுரை–செங்கோட்டை, திண்டுக்கல்–மதுரை உள்ளிட்ட 13 பயணிகள் ரயில்களின் எண்கள் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகின்றன. இருமார்க்கத்திலும் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தினசரி பயணம் செய்யும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்கும் பல பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வாஞ்சி மணியாச்சி–திருச்செந்தூர், வாஞ்சி மணியாச்சி–தூத்துக்குடி ரயில்களுக்கும் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ரயில் இயக்கத்தில் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மதுரை–செங்கோட்டை, செங்கோட்டை–திருநெல்வேலி, திருவாரூர்–காரைக்குடி, திருவாரூர்–பட்டுக்கோட்டை உள்ளிட்ட வழித்தடங்களிலும் ரயில் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. கண்ணூர்–மங்களூரு பயணிகள் ரயிலுக்கும் புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே புதிய ரயில் எண்களை சரிபார்த்து பயணம் செய்யுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!