undefined

பழைய ஹால்டிக்கெட் செல்லாது... மார்ச் 15-ல் குரூப் 2, 2ஏ மறுதேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

 

தேர்வு மையங்கள் ஒதுக்கீடு மற்றும் ஹால் டிக்கெட்டுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் நேற்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தாள்-I (தமிழ் தகுதித் தேர்வு) மற்றும் தாள்-II (பொது அறிவு) ஆகிய இரண்டு தேர்வுகளும் வரும் மார்ச் 15ம் தேதி நடைபெறும். காலை மற்றும் மதியம் என இரண்டு அமர்வுகளாகத் தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்வர்கள் தங்களது புதிய நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 28ம் தேதிக்குள் புதிய ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் தங்களது ஒருமுறைப் பதிவு (OTR) எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பழைய ஹால் டிக்கெட்டுகள் செல்லாது என்பதால், புதிய நுழைவுச் சீட்டைப் பெறுவது அவசியமாகும்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெறவிருந்த குரூப் 2 முதன்மைத் தேர்வு (நேர்காணல் பதவிகளுக்கானது) எந்த மாற்றமும் இன்றி அதே தேதியில் நடைபெறும் எனத் தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகும்.

தேர்வுப் பணியில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய குளறுபடியைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் IAS அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய அலுவலராக வெங்கடபிரியா IAS நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க மென்பொருள் மற்றும் மைய ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என ஆணையம் உறுதி அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!