"ஆஸ்கர் உறுப்பினர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" - 'ஸ்லம்டாக் மில்லியனர்' குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி!
இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படம் குறித்த ரஹ்மானின் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளன.
"ஸ்லம்டாக் மில்லியனர் உங்களின் மிகச்சிறந்த படைப்பா?" என்ற கேள்விக்கு, "நிச்சயமாக அது எனது சிறந்த படைப்புதான்" என்று அவர் பதிலளித்தார்.
ஹாலிவுட் சூழலில் அந்தப் படத்திற்காகத் தான் உருவாக்கிய ஒலிக்காட்சி (Soundscape) அதற்கு முன் அங்கு இருந்ததில்லை என்றும், மேற்கத்திய நாடுகளுக்கு அது ஒரு புதிய மற்றும் அற்புதமான அனுபவமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "உலகத் தரம் வாய்ந்த இசையைக் கேட்டுப் பழகிய ஆஸ்கர் உறுப்பினர்கள் ஒரு படைப்பிற்கு வாக்களிக்கிறார்கள் என்றால், அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இன்றைய சினிமா உலகைப் பற்றிப் பேசுகையில் ரஹ்மான் சில கசப்பான உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்: இன்றைய காலகட்டத்தில் சில படங்கள் தீய நோக்கங்களுக்காகவும், பிரிவினையைப் பேசிப் பணம் சம்பாதிக்கவும் எடுக்கப்படுகின்றன. அத்தகைய படங்களைத் தான் தவிர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் வெளியான 'சாவா' திரைப்படம் குறித்தும் அவர் பேசினார். "அப்படம் பிரிவினையைப் பேசினாலும், அதன் மையக்கரு துணிச்சலைக் காட்டுவது என்று நினைக்கிறேன். அதன் இயக்குநரிடம் 'இதற்கு நான் ஏன்?' என்று கேட்டபோது, நீங்கள் மட்டுமே தேவை என்று அவர் கூறினார்" என ரஹ்மான் குறிப்பிட்டார். "மக்கள் புத்திசாலிகள்; எது உண்மை, எது திரிபு என்பதை அறியும் மனசாட்சி அவர்களுக்கு இருக்கிறது" என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!