undefined

மதுரைக்காரைங்க கெத்து... தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட 25 சவரன் நகைகள்... மீட்டுக் கொடுத்த பெண் தூய்மைப் பணியாளர்!

 

செய்தியை சொல்லி நாங்க மதுரைக்காரைங்க என்று கெத்து காட்டுகிறார்கள். உண்மையிலேயே கெத்தான விஷயம் தான். தன் மகளுக்கு அடுத்து வரும் தை மாதம் திருமணம். திருமணத்திற்காக சுமார் 25 சவரன் நகைகளை சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ளார். தங்கம் விற்கிற விலையில், நகைகளைப் பாதுகாக்க, வீட்டிலிருந்த தலையணை ஒன்றினுள் தங்க நகைகளை மறைத்து, பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்.

மகளின் திருமணத்திற்காகச் சேமித்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் தவறுதலாகக் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட நிலையில், அதை நேர்மையாக மீட்டு ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் மனிதநேயச் செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை சுந்தரராஜபுரம் நியூ ரைஸ்மில் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கம் என்பவர் இப்படி சிறிய தலையணைக்குள் நகைகளை மறைத்து வைத்திருந்தார்.

வீட்டைச் சுத்தம் செய்யும் பணியின்போது, பழைய துணிகளுடன் அந்தத் தலையணையையும் தெரியாமல் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டனர். சிறிது நேரம் கழித்து நகை நினைவுக்கு வந்தபோது, குப்பைத் தொட்டியைத் தேடியும் கிடைக்கவில்லை. பதற்றமடைந்த தங்கம் உடனடியாகத் துப்புரவு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

உடனடியாகச் செயல்பட்ட மேற்பார்வையாளர் மருதுபாண்டியன், தூய்மைப் பணியில் இருந்த பணியாளர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். அப்போது, தூய்மைப் பணியாளர் மீனாட்சி என்பவர், குப்பைக் கிடங்கில் தேடிக் கொண்டிருந்த போது, அந்தத் தலையணை கண்ணில் பட்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் 25 பவுன் நகைகள் இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.

உடனடியாக மீனாட்சி, மேற்பார்வையாளர் மருதுபாண்டியனுடன் சேர்ந்து, நகை உரிமையாளரான விவசாயி தங்கத்திடம் நகைகளை பத்திரமாக ஒப்படைத்தார். வாழ்நாள் சேமிப்பாகவும், மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையும் மீண்டும் கைக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் தங்கம் கண்கலங்கி, மீனாட்சிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் இந்தப் பெண் பணியாளரின் நேர்மையான செயலுக்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நேர்மையும் மனிதநேயமும் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஓர் உதாரணமாக இந்தச் சம்பவம் மதுரையில் பேசுபொருளாகி உள்ளது. நேர்மையுடன் நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி மற்றும் மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!