undefined

உலகம் அழியும் என பீதியை கிளப்பியவர்…  தட்டித் தூக்கிய காவல்துறை!

 

கானாவை சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்பவர், தன்னை ‘எபோ நோவா’ என அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என கூறி மக்களிடையே பீதி ஏற்படுத்தினார். இதையடுத்து கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. தன்னை தீர்க்கதரிசி என கூறி பயம் கிளப்பியதே கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் எபோ நோவா, நோவாவின் பேழை போல் பெரிய மரப் பேழை கட்டும் வீடியோக்களை வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் பெரும் வெள்ளப்பெருக்கு வரும் என கூறி, மக்களை மனந்திரும்ப அழைப்பு விடுத்தார். இதனால் அவர் பேழை கட்டிய இடம் சுற்றுலா தலமாக மாறி, பலர் அங்கு சென்று பார்த்தனர்.

கடந்த வாரம் அவர் தனது தீர்க்கதரிசனத்தை மாற்றி, வெள்ளப்பெருக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தார். இதற்கிடையே பணம் வசூலித்ததாகவும், புதிய கார் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அவர் மறுத்த நிலையில், ஆன்லைன் கண்காணிப்பு தீவிரமாக இருந்த நேரத்தில் கைது நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!