undefined

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டவரே அத்துமீறிய அசிங்கம்!

 

கோவையில் ஒரு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட காவலரே, சட்டத்தை மீறி இளம்பெண் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் அத்துமீறி வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த மாதவகண்ணன் (27) என்பவர், இந்த அருவருக்கத்தக்க செயலுக்காக தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன், ஆய்வாளர் ஒருவரிடம் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராகவும், அவரது குடும்ப உறுப்பினரைப் போலவும் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஆய்வாளர் தனது வீட்டில் இருந்த தனது மகள்களைக் கவனித்துக் கொள்வதற்காகத் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை அங்குத் தங்க வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாகப் பணி நிமித்தமாக ஆய்வாளர் வீட்டிற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பாக இருக்கும்படி ஓட்டுநர் மாதவகண்ணனைத் தனது மதுக்கரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆய்வாளர் தன் மீது வைத்த நம்பிக்கையைச் சற்றும் மதிக்காமல், மாதவகண்ணன் வக்ர புத்தியுடன் செயல்பட்டுள்ளார். அந்த வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் குளித்துக் கொண்டிருந்த போது, மறைந்திருந்து தனது செல்போன் மூலம் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதைக் கவனித்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அங்கிருந்து தப்பித்துத் தனது உறவினரான ஆய்வாளருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துக் கதறி அழுதுள்ளார். தான் பாதுகாப்பிற்கு அனுப்பிய நபர் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர், உடனடியாக இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மதுக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மாதவகண்ணன் அந்தப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை கைது செய்து, செல்போனையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் உள்ள வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு காவலரே, சக அதிகாரியின் வீட்டிலேயே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது கோவை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!