undefined

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.200 உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

 

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் உயர்ந்து வருகின்ற நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 அதிகரித்து நகைப் ப்ரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்கு வகித்து வரும் தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன. நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து, ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.44,720-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,559-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,579-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் உயர்ந்து, ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!