இளம்பெண்ணைப் பலாத்காரம்... காங். எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் மீது, இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதியப்பட்ட வழக்கில், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, ராகுல் மாங்கூட்டத்திலை கைது செய்யப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுடன் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் நடத்திய ஆபாச சாட்டிங் விவரங்கள் மற்றும் இளம்பெண்ணைக் கருச்சிதைவு செய்வதற்கு மிரட்டும் ஆடியோவும் வெளியாகின. முதலில் புகார் அளிக்காத அந்த இளம்பெண், கடந்த சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராகப் புகார் அளித்தார்.
இதனையடுத்து, திருவனந்தபுரம் வலியமலை போலீஸார், ராகுல் மாங்கூட்டத்தில் மீது பலாத்காரம் மற்றும் மிரட்டி கருச்சிதைவு செய்ய வைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ தலைமறைவானார்.
அவர் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நசீரா, ராகுல் மாங்கூட்டத்திலின் முன்ஜாமீன் மனுவைத் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் மாங்கூட்டத்திலை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.போலீஸார் அவரைத் தேடும் பணியைத் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்டப் பல மாநிலங்களில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!