‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் நிஜ கதாநாயகன் தேர்தலில் தோல்வி!
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் நிஜக் கதாநாயகனான சுபாஷ் சந்திரன் (வயது 46), கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மூன்றாவது இடத்தைப் பிடித்துத் தோல்வியடைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் சுபாஷ் சந்திரன். கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் தன் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது, புகழ்பெற்ற குணா குகையில் உள்ள ஆழமான குழிக்குள் தவறி விழுந்தார். அப்போது, உடன் இருந்த நண்பர்கள் குழு, உயிரைப் பணயம் வைத்து அவரை மீட்டுக் கொண்டு வந்தது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, பட்டித்தொட்டியெங்கும் பெரும் வெற்றியடைந்த திரைப்படம்தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. அந்தத் திரைப்படத்தில் வரும் சுபாஷ் என்ற கதாபாத்திரத்தின் நிஜ நாயகன் இவரேதான்.
சினிமாவில் அசாத்திய சவாலில் இருந்து மீண்டு வந்த இவர், நிஜ வாழ்வில் அரசியல் சவாலைச் சந்தித்தார். சுபாஷ் சந்திரன், ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராகக் களமிறங்கினார். தற்போது முடிந்த வாக்கு எண்ணிக்கையில் இவர் வெற்றி வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல், மூன்றாவது இடத்தைப் பிடித்துத் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!