நாளை பழனி மலைக் கோயிலில் ரோப்காா் சேவை நிறுத்தம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை (டிச.22) ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பக்தா்கள் மலைக்கோயிலுக்கு எளிதாக செல்லும் வகையில் ரோப்காா் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் உச்சியை அடையும் இந்த சேவை பக்தா்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சேவை நடைபெறுகிறது.
ரோப்காா் சேவை நிறுத்தப்படும் நாளில் பக்தா்கள் படிப்பாதை, விஞ்ச் பாதை, யானைப் பாதை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளுமாறு கோயில் நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!