undefined

158வது நாள்...    கூவத்தில்  ஓயாத தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

 

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது, பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 158-வது நாளை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த போராட்டம் மாநகரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட வாசகங்களை கையில் ஏந்தியபடி கூவம் ஆற்றுக்குள் நின்று முழக்கமிட்டனர். தங்களின் வேதனையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக இந்த போராட்டம் அமைந்தது.

தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பல மாதங்களாக போராட்டம் தொடர்ந்தும் தீர்வு கிடைக்காததால், தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!