undefined

 கள்ளக்காதல் ... ஆத்திரத்தில் கொழுந்தியாளை  குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்! 

 
 

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஒசஅள்ளிபுதூரை சேர்ந்தவர் பிரபு (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). பிரபுவின் பங்காளியான அனுமந்தன் (40) என்பவருடன் ராஜேஸ்வரிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் வெளியே தெரிந்ததால், ராஜேஸ்வரி உறவை கைவிட்டு அனுமந்தனுடன் பேசுவதை தவிர்த்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று மதியம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு சென்ற ராஜேஸ்வரியை, கடைசியாக பேச வேண்டும் என அழைத்து கல்லுகொல்லைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜேஸ்வரியை குழிக்குள் தள்ளி, தலை மீது கல்லை போட்டு கொன்றார்.

பின்னர் தயாராக வைத்திருந்த டிராக்டரில் இருந்த கட்டிட கழிவு மண்ணை குழியில் கொட்டி மூடி விட்டு தப்பினார். சந்தேகமடைந்த அருகிலிருந்த விவசாயிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர். பொக்லைன் மூலம் தோண்டியபோது ராஜேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் அனுமந்தன் மற்றும் உடந்தையாக இருந்த ஜேசிபி ஆப்ரேட்டர் ஜெகன் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!