விண்ணதிர ‘சரணம் ஐயப்பா’ கோஷம்.. சபரிமலை சரங்கொத்தியில் ‘பள்ளிவேட்டை’.. இன்று பம்பையில் ‘ஆறாட்டு’.. யானை மீது ஊர்வலம்!
சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 23ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில், மேல்சாந்தி கோவில் நடையைத் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று ஆறாட்டு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா" என விண்ணதிர முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று இரவு, சரங்குத்திப் பகுதியில் 'பள்ளிவேட்டை' நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமி விக்ரகம் சன்னிதானத்திற்குத் திரும்பும் நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'ஆறாட்டு' இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்கப் பம்பை ஆற்றுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் அங்குள்ள பம்பை குளத்தில் ஐயப்பனுக்குப் புனித நீராட்டு எனும் 'ஆறாட்டு' நடைபெறும். பின்னர் இன்று மாலை சன்னிதானத்தில் திருவிழாக் கொடி இறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!