undefined

கதறிய வீரர்கள்... மைதானத்தில் பயிற்சியின் போது டாக்கா கேபிடல்ஸ் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

 

வங்கதேச பிரீமியர் லீக் (BPL) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், மைதானத்திலேயே பயிற்சியாளர் ஒருவர் மாரடைப்பால் காலமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், ராஜ்ஷாஹி மற்றும் டாக்கா கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நடைபெறவிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மஹ்பூப் அலி ஜாகி (59) வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் உலகில் மிகவும் மதிக்கப்படும் பயிற்சியாளர்களில் ஒருவராக மஹ்பூப் அலி ஜாகி திகழ்ந்தார். இவர் வங்கதேசத்தின் பல திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். உள்நாட்டு கிரிக்கெட்டில் நீண்ட காலம் பணியாற்றிய இவர், இளம் வீரர்களின் நுணுக்கங்களைச் செதுக்குவதில் வல்லவராகக் கருதப்பட்டார். மஹ்பூப் அலியின் மறைவுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மற்றும் டாக்கா கேபிடல்ஸ் அணி நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

"மஹ்பூப் அலியின் மறைவு வங்கதேச கிரிக்கெட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஒரு சிறந்த பயிற்சியாளரை விடவும், ஒரு நல்ல மனிதரை நாங்கள் இழந்துவிட்டோம்" என டாக்கா கேபிடல்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு மதிப்பளிக்கும் விதமாக, மைதானத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வீரர்களும் பயிற்சியாளர்களும் கருப்புப் பட்டை அணிந்து தங்களது இரங்கலைப் பதிவு செய்தனர். இந்தத் துயரச் சம்பவத்தால் நேற்றைய போட்டி மிகுந்த கனத்த இதயத்துடன் நடைபெற்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!