undefined

கணவரை பிரிந்த மன அழுத்தம்..   8 வயது மகளுடன்  கிணற்றில் குதித்து தாய் தற்கொலை! 

 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் டில்லி. அவரது மகள் கீதா (37). வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த அருண் என்பவரை 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 8 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தாய் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார்.

கீதா சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்ததால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு குடும்பத்தினருடன் பேசிவிட்டு சாப்பிட்டு தூங்கச் சென்றார்.

இன்று காலை எழுந்த போது கீதாவையும், அவரது மகளையும் காணவில்லை. தேடியபோது வீட்டருகே உள்ள விவசாய கிணற்றில் இருவரும் பிணமாக மிதந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மன விரக்தியில் தாய்-மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!