திருடியதை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடன்!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு மேண்டலின் கருவிகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார். இது குறித்து கடை உரிமையாளர் பஜி லெவின் சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் சில நாட்களிலேயே அந்த திருடன் மனம் மாறினார். திருடப்பட்ட கருவிகளை இரண்டு பைகளில் வைத்து, கடையின் வாசலில் ரகசியமாக ஒப்படைத்துவிட்டு சென்றார். அதோடு ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அவர் விட்டுச் சென்றார்.
அந்தக் கடிதத்தில், மது போதையில் தவறு செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். கடை உரிமையாளர் நல்ல மனிதர் என்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். விலையுயர்ந்த கருவிகள் சேதமின்றி திரும்பக் கிடைத்ததால் கடை உரிமையாளர் மகிழ்ச்சியடைந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!