undefined

 3 வதும் பெண் குழந்தை... மனைவி, மகளை பிரிந்த கணவர்... மருத்துவர் நெகிழ்ச்சி வீடியோவால் ட்விஸ்ட்!  

 

ஹைதராபாத்தில்   தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர்  டாக்டர் சுஷ்மா. இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில்  உணர்ச்சிபூர்வமான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில்  தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண் குழந்தையைப் பற்றி கூறினார். அதன்படி  “ பெற்றோருக்கு இந்த குழந்தை 3 வது பெண் குழந்தையாக இருப்பதால், அவர்கள் மிகுந்த  வருத்தத்தில் இருந்தனர்” என கூறினார்.

பெண்குழந்தை பிறந்ததை கேட்டு பிரசவத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தை தாயை அழைக்கவோ பார்க்கவோ வரவே இல்லை எனக் கூறினார்.  சுஷ்மாவின் இந்த உருக்கமான பதிவு வைரலாகி  வேகமாக பரவி, பலரது மனதையும் உருக்கியது.
இந்த வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சி, கோபம் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். “ஒரு பெண் குழந்தை பிறந்ததற்காக இவ்வளவு தவிர்ப்பா?” என்ற கேள்வி எழுந்தது.
பலரும் அந்தக் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து  டாக்டர் சுஷ்மா இரண்டாவது வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்தார். மக்கள் அளித்த உற்சாக ஆதரவை உணர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள், தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டனர்.   தற்போது குழந்தையை அன்புடன் வளர்க்க வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.“ஒரு குழந்தையை பெற எத்தனை பேர் ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்ததும், அந்த தந்தையும் உறவினர்களும் உருகிவிட்டார்கள்,” என சுஷ்மா பதிவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?