திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்!!
ஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று (நவம்பர் 24) காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரமுள்ள கொடிமரத்தில், கொடியேற்றம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
10 நாள் உற்சவம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மொத்தம் 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு டிசம்பர் 3ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 3ம் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த வருடாந்திரத் தீபத் திருவிழாவைக் காண, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!