கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!! மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம்  உயர்வு!! 

 

நாடு முழுவதும் விரைவாகவும் எளிதாகவும் பயணிக்க நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்க நாம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகள் பெரும் சுமையாக உள்ளது. சுங்கச்சாவடி முறையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்டகாலமாக குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் சுங்கச்சாவடிகளை அதிகரித்து கட்டணத்தை உயர்த்துவதில் குறியாக உள்ளது மத்திய அரசு.

தற்போது பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், சுங்கச்சாவடிகளில் நாம் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறைந்துள்ளது. நாடு முழுக்க 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சகம் நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் சுங்கச்சாவடிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அளித்துவிடும். அதன் பிறகு தனியார் நிறுவனங்களே சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும். சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்படும்.

இந்த நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31ஆம் தேதி முதல் உயர்கிறது.

சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுங்கக்கட்டணம்  உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!