பகீர் வீடியோ... மனைவியை அடித்து, மாடியிலிருந்து வீசிய கணவனின் குடும்பம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜாலௌன் மாவட்டம் ஒரை பகுதியில் அதிர்ச்சி தரும் சம்பவம் பதிவாகியுள்ளது. ஜூன் 19ம் தேதி இரவு, தனது 2 வது மனைவியான 35 வயது ஆம்னாவை, கணவர் ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் 2வது மாடியில் இருந்து தள்ளி விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 19 மாலை, அவரது பேரன் கொடுத்த தகவலின்பேரில் கமர் சித்திகி சம்பவ இடத்துக்கு வந்து, ஆம்னாவை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆம்னா கூறியதின்படி, அவரது கணவர் ஆரிப், சகோதரர் இம்ரான், சகோதரி ஷெஹ்நாஸ், அரிபின் முதல் திருமணத்திலிருந்த மகள் நிதா மற்றும் அவரது தந்தை ரஹ்மத்துல்லா ஆகியோர் ஒன்றுசேர்ந்து தன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதாகவும் ஓடத் தொடங்கியதும் ஷெஹ்னாஸ் மற்றும் நிதா அவரை அறையில் பூட்டிவைத்து தாக்கியதுடன், பின்னர் மாடியில் ஓடியபோது கீழே தள்ளிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். வீடியோவில், ஒரு பெண் மாடியிலிருந்து கீழே விழுவதும், பைக்கின் மேல் பட்டு விழுவதும் காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!