undefined

வைரலாகும் வீடியோ... விஜய் படத்தை தீயிட்டுக் கொளுத்திய திமுக வைஷ்ணவி... நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?! 

 

பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையன்று, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற அடிப்படையில் மக்கள் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். ஆனால், திமுக நிர்வாகி வைஷ்ணவி என்பவர், தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம் பொறித்த டி-ஷர்ட்டை எரித்து அதனை வீடியோவாகப் பதிவிட்டது தவெக தொண்டர்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

ஆரம்பத்தில் தமிழக வெற்றிப் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த வைஷ்ணவி, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த நாள் முதல், தவெக கொள்கைகளையும் விஜய் எடுக்கும் முடிவுகளையும் வைஷ்ணவி கடுமையாகச் சாடி வருகிறார்.

நேற்றைய போகி பண்டிகையின் போது, "பழையன கழிவது தான் போகி" என்ற வாசகத்துடன், விஜய் படம் போட்ட டி-ஷர்ட்டை தீயிட்டுக் கொளுத்திய வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, தமிழக வெற்றிப் கழகத் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் வைஷ்ணவிக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

"அரசியல் நாகரிகம் இன்றி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என்றும், "வைஷ்ணவி தனது எல்லையை மீறிச் செல்கிறார்" என்றும் தவெகவினர் கொந்தளித்து வருகின்றனர். தவெக தொண்டர்களின் பதிலடிக்கு ஈடாக, திமுக ஆதரவாளர்களும் வைஷ்ணவிக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், எக்ஸ் மற்றும் முகநூல் தளங்களில் பெரும் கருத்துப் போர் நிலவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!