வைரலாகும் வீடியோ... “என்னையும், குழந்தையையும் கொல்றதா பொண்டாட்டி மிரட்டுறா...” கதறும் கணவர்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் பவன் என்ற இளைஞர். இவர் தனது மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு பவன் தனது மகனை வீடியோ கால் முயற்சித்தார். அப்போது மனைவி ஒருவருடன் இருப்பதாக சந்தேகமடைந்தார். போலீசாரை அனுப்பியபோது, அந்த வீட்டில் கவுன்சிலர் ஒருவர் இருப்பதாக தெரியவந்தது. இதை வீடியோ எடுத்து பகிர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசாரை அந்த கவுன்சிலர் மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவன் இது குறித்து “அவர் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் என் மகனுக்கேதும் நேரக்கூடாது. எனக்கு அவர் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. நான் அவருடன் மீண்டும் வாழ முயற்சித்தால் நாளை என் சடலம் ட்ரம்மில் கிடைக்கும் நிலை உருவாகலாம்” என கூறினார். இச்சம்பவம் குறித்து காவல் அதிகாரி ராம்வீர் சிங் “இந்த வீடியோவில் காணப்படும் நபர் ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து வெளியே வருகிறார். அந்த பெண் வயிறு வலிக்கிறதென மருந்து கேட்கவே அழைத்ததாக கூறினார். இதுவரை எந்த தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வ புகார் பெறப்படவில்லை. விசாரணைக்கு பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!