வைரலாகும் வீடியோ.... ரஜினி வீட்டில் விசேஷ பொங்கல்... பேரன்களுடன் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்த நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
தனது சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரன்களுடன் இணைந்து ரஜினி பொங்கல் வைத்தார். பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டையில் ரஜினி மிகவும் எளிமையாகக் காணப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று தனது வீட்டின் வெளியே திரளும் ரசிகர்களைச் சந்தித்து ரஜினி வாழ்த்து கூறுவது வழக்கம். இம்முறையும் ரசிகர்களைப் பார்த்து கையசைத்து, அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!