வைரலாகும் வீடியோ... இளம்பெண்கள் குடுமிப்பிடி சண்டை.. அரண்ட மக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், 168 செக்டர் பாரஸ்ட் சீசன் சொசைட்டியில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணின் தலைமுடியை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்து கூச்சலிடுகிறார்.
தாக்கப்பட்ட பெண் தரையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக செயலற்ற நிலையில் இருந்து வருகிறார். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாக்குதல் நடத்திய பெண்ணின் தாயை மற்றொரு பெண் திட்டியதால் அந்த தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த தகராறு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. சமீப காலங்களாக பல பகுதிகளிலும், பொது இடங்களில் பெண்கள் இப்படி சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!