பகீர் வீடியோ... பிரபல யூடியூபரை ரயில் பெர்த்திலிருந்து கீழே தள்ளி தாக்குதல் நடத்திய பணியாளர்கள்!
பிரபல யூடியூபர் விஷால் சர்மா. இவர் பயண வலைப்பதிவாளரும் கூட. விஷால் சர்மா, ஹேம்குண்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14609) ரயிலில் பயணம் செய்தபோது, தண்ணீர், காபி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை எதிர்த்து புகார் அளித்துள்ளார். இதற்காக பாண்ட்ரி ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து இரவு நேரத்தில் பாண்ட்ரி ஊழியர்கள் விஷால் சர்மாவை படுக்கையில் இருந்து கீழே இழுத்து தாக்கிவிட்டனர். இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், மேலாடையின்றி இரத்தம் சிந்திய நிலையில் காணப்பட்ட விஷால், “பயணிகள் பாதுகாப்பு எங்கே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து, IRCTC , “மிக விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!