undefined

பிப்.26ல் திருமணம்.. மார்ச்.4ல் வரவேற்பு... இணையத்தில் வைரலாகும் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணப் பத்திரிகை!

 

பல ஆண்டுகளாகத் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி, தற்போது திருமணத்திற்குத் தயாராகிவிட்டதை அவர்களின் வைரல் அழைப்பிதழ் உறுதிப்படுத்தியுள்ளது.

இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் திருமணமானது மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், ஆரவாரமின்றி எளிமையான முறையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே ஹைதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்திருந்தது. ராஷ்மிகா அணிந்திருந்த மோதிரம் அப்போதே ரசிகர்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. திருமணம் எளிமையாக நடந்தாலும், திரையுலக நண்பர்களுக்காக ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு (Reception) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் உலவி வரும் இவர்களின் திருமண அழைப்பிதழ், மிகவும் நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இரு வீட்டாரின் பெயர்களும், திருமண முகூர்த்த நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த அழைப்பிதழ் குறித்து விஜய் தேவரகொண்டா அல்லது ராஷ்மிகா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித மறுப்போ அல்லது உறுதிப்படுத்தலோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஜோடி, 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. திரையில் இவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நிஜ வாழ்விலும் தொடர்வது அவர்களது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 'நேஷனல் க்ரஷ்' என்று அழைக்கப்படும் ராஷ்மிகா, தற்போது திருமண பந்தத்தில் இணையப் போவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!