கதறிய மனைவி... பதறிய உறவினர்கள்... திருமணமான 5 நாட்களில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, திருமணமான ஐந்தே நாட்களில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது திருமண வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே உயிரை மாய்த்துக்கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல் எடிசன் (26). இவர் நாலுமாவடியில் உள்ள தனியார் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் பணியாற்றி வந்தார். இம்மானுவேல் எடிசனுக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த அக்சால் என்ற பெண்ணிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி கோவில்பட்டியில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து ஆறுமுகநேரியில் வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 6:20 மணியளவில் திருச்செந்தூரிலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில், அடைக்கலாபுரம் அருகே வந்தபோது இம்மானுவேல் எடிசன் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், இம்மானுவேல் எடிசனின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடிந்து 5 நாட்களே ஆன நிலையில், அவர் இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணம் என்ன? குடும்பப் தகராறா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தமா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமணமான சில நாட்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!