குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது... 10 முக்கிய மசோதாக்கள்... பிரதமர் மோடியில் வைரல் பேச்சு!
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வழக்கம் போல நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்கும் நாடகங்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளுக்குச் சற்று காட்டமான தொனியில் சில முக்கியக் கருத்துக்களை முன்வைத்தார்: "வெற்றியின் ஆணவத்தையும், தோல்வியின் விரக்தியையும் வெளிப்படுத்தும் இடமல்ல நாடாளுமன்றம். நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. நாட்டுக்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் தான் நாடாளுமன்றம்."
"எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கி நாடகங்கள் நடத்துவதைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்." "பீகார் தேர்தல் தோல்வி தந்த அழுத்தத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் மீண்டு வர வேண்டும்." (பீகார் தேர்தலில் பெண்களின் பங்களிப்பால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்). "நாட்டின் பொருளாதார வளர்ச்சி புதிய நம்பிக்கை தந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்."
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்கி வரும் டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் அணுசக்தி மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, காப்பீட்டுத் திருத்த மசோதா உள்ளிட்ட 10 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இளம் எம்.பி.க்கள், முதன்முறை எம்.பி.க்கள் அவையில் அதிகமாகப் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!