70 ஆண்டுகளில் இல்லாத துயரம்... ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; 280 பேர் மாயம்!
ஹாங்காங் நகரத்தில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய பேரிடராகக் கருதப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று (நவம்பர் 26) மதியம் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பைத் தொடர்ந்து, அருகிலிருந்த மற்றக் கட்டடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது. தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள், இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் போராடி அணைத்தனர். இந்த விபத்து, ஹாங்காங்கின் வரலாற்றிலேயே மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. 76 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர் கவலைக்கிடமாகவும், 28 பேர் கடுமையான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலா 32 தளங்களைக் கொண்ட 7 கட்டடங்களில் வசித்தவர்களில் 280 பேர் மாயமாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணிகளில் ஹாங்காங் மீட்புப் படையினர் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!