ஷாருக்கான் மீது தவறில்லை... கிரிக்கெட் வீரர் மதன் லால் கருத்து!
வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணியில் சேர்த்த விவகாரத்தில், அணியின் உரிமையாளர் ஷாருக்கானின் மீது தவறில்லை என்று முன்னாள் இந்திய வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். 2026 ஐபிஎல் போட்டிக்காக முஷ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் ஒப்பந்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கேகேஆர் நிர்வாகம் இன்று முஷ்தஃபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய மதன் லால், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான முடிவுகள் மத்திய அரசு மற்றும் பிசிசிஐ எடுக்க வேண்டியவை என்றார். வீரர்கள் தேர்வுக்காக அணிகளில் தனிக்குழு இருக்கும் என்றும், இதில் ஷாருக்கானை குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறினார்.
முன்னதாக, ஷாருக்கானை தேசத் துரோகி என விமர்சித்த பாஜக நிர்வாகி சங்கீத் சிங் சோம், முஷ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார். சநாதனவாதிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதை ஷாருக்கான் இப்போது புரிந்துகொண்டிருப்பார் என்றும் அவர் பேசியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!