திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ட்ரோன், ரீல்ஸ்களுக்கு தடை!
திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விடவும், ரீல்ஸ் வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கோயில் மரியாதையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்துவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதள ரீல்ஸ், வீடியோ படப்பிடிப்புகளுக்கும் அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுவோரின் ட்ரோன், கேமரா உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!