இன்று மெரினாவில் திருக்குறள் இசை மாலை !
திருக்குறள் வாரத்தை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று முதல்வர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பல ஆண்டுகளாக உருவாக்கிய திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியப் பாடல்கள் இசை வடிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும். அதற்கு முன் 3 மணி முதல் சென்னை சங்கமம் நிகழ்ச்சியும், 6 மணி முதல் நடிகை சுஹாசினியின் “என் சென்னை” நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!