"12 கேட்டோம்.. 8 வது கொடுங்க!" - இறங்கி வந்த திருமாவளவன்... திமுக போடும் 6+1 கணக்கு ஒர்க்-அவுட் ஆகுமா?
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கூட்டணியில் நீண்டகாலமாக அச்சாணியாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்த முறை தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் (10 முதல் 12 இடங்கள்) தொகுதிகள் வேண்டும் என ஆரம்பம் முதலே அழுத்தம் கொடுத்து வந்தது. குறிப்பாக, கட்சிக்குக் கிடைத்துள்ள 'அங்கீகரிக்கப்பட்ட கட்சி' அந்தஸ்து மற்றும் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி விசிக நிர்வாகிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
இருப்பினும், கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது. தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இணையாகத் தங்களுக்கும் தொகுதிகள் வேண்டும் என விசிக வலியுறுத்தியுள்ளது. ஆனால், கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் 6 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, விசிகவின் கோரிக்கையை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் தமிழகத்தில் 6 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் 1 இடம் என '6+1' என்ற சூத்திரத்தை திமுக தலைமை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக தரப்பில் குறைந்தபட்சம் 8 இடங்களாவது வேண்டும் என பிடிவாதம் காட்டுவதால், பேச்சுவார்த்தையில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. "எங்கள் பலத்தை அங்கீகரிக்கும் வகையில் தொகுதிகள் இருக்க வேண்டும்" எனத் திருமாவளவன் கூறி வரும் நிலையில், இறுதிப் பட்டியல் எப்போது வெளியாகும் என உடன்பிறப்புகளும், சிறுத்தைகளும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!