திருமா வேளச்சேரியில் போட்டி... ? சூடு பிடிக்கும் தேர்தல் களம்! 

 

தமிழகத்தில் 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை தனது தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று (மார்ச் 21) முதல் வரும் 24-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான 'அம்பேத்கர் திடல்' தொண்டர்களின் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. குறிப்பாக, முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்வத்துடன் திரண்டு வந்து தங்களின் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்தத் தேர்தல் திருவிழாவின் ஹைலைட்டாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தனித்தொகுதிகளில் கவனம் செலுத்தும் விசிக, இம்முறை பொதுத்தொகுதியான வேளச்சேரியில் தனது தலைவரை நிறுத்தத் திட்டமிட்டிருப்பது, கட்சியின் வளர்ச்சியைப் பறைசாற்றும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் விருப்ப மனு கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் வரிசையாகத் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த விருப்ப மனுத் தாக்கல் நிகழ்வு, நாளை கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், மார்ச் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் முறையே திருச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கும் நடைபெற உள்ளது. "வெற்றி ஒன்றே இலக்கு" என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் திருமாவளவன், வேளச்சேரி தொகுதியைத் தேர்வு செய்திருப்பது அத்தொகுதி மக்களிடையே மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுப் படலங்கள் ஒருபுறம் இருக்க, தலைவரே களமிறங்குவதால் விசிக தொண்டர்கள் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!