திருப்பரங்குன்றம் குறித்து தவறான கருத்துக்களை பரப்பாதீங்க... உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு இருமுறை பிறப்பிக்கப்பட்டும், அரசு அதை அமல்படுத்தாததால், வழக்கு மீண்டும் விவாதத்திற்கு வந்தது. மனுதாரர் தரப்பு “கோட்டத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அவமதித்துள்ளனர்” என்று வாதிட, அரசு தரப்பு “உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தது. இதையடுத்து, உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை மற்றும் CISF வீரர்களை ஏன் அனுமதிக்கவில்லை என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தைப் பற்றிய மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு எடுத்தது. சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகள் பகிரப்படுவதை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், “நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் இரு தரப்பினரும் பொதுவெளியில் பேச வேண்டும்” என எச்சரித்தது. மேலும், இவ்விவகாரம் தொடர்பான கூடுதல் மனுக்கள் டிசம்பர் 10 வரை தாக்கல் செய்யலாம் என்றும், அனைத்து மனுக்களும் டிசம்பர் 12-ஆம் தேதி ஒன்றாக விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
தீபத் தூண் விவகாரம் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது மாநிலம் முழுவதும் கவனம் திரும்பியுள்ளது. நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை அமல்படுத்தாத அரசின் நிலைப்பாடு குறித்து எழும் கேள்விகளுக்கு, காவல்துறை தாக்கல் செய்யும் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!