திருப்பதி  ஜூலை மாத தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரும் ஜூலை மாதத்திற்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கான முன்பதிவு தேதிகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கான குலுக்கல் முறைப் பதிவுகள் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்க உள்ளன. பக்தர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இதற்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. அதே நாளில் மதியம் 3 மணிக்கு இணையவழி சேவைகள் மற்றும் அதற்கான தரிசன இடங்களும் பக்தர்களுக்குக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு தரிசன டோக்கன்கள் மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன்களும் இதே தேதியில் வெவ்வேறு நேரங்களில் வெளியிடப்பட உள்ளன.

பக்தர்கள் அதிகம் எதிர்பார்க்கும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதே நாளில் மதியம் 3 மணிக்குத் திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கான அறைகளை முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிகள் செய்து தரப்படும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை மட்டுமே பயன்படுத்தி பக்தர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜூலை மாதத்தில் சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!