undefined

தினம் ஒரு திருப்பாவை... முதல் பாசுரம்! 

 
மார்கழி முதல் நாள் 

திருப்பாவை முதல் பாசுரம்... 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்,
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்! 

பாடலின் விளக்கம் : 
மார்கழி மாதம் முழு நிலவு நிறைந்த நல்ல நாள் இது.
அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்களே! நீராடப் போகலாம், வாருங்கள்!
சிறப்பு நிறைந்த ஆயர்பாடியில் வாழும் செல்வச் சிறுமிகளே!


கூர்மையான வேலுடன் (தீயவர்களைத் தடுக்கும்) நந்தகோபனின் மகனும், அழகிய கண்களை உடைய யசோதையின்  இளஞ்சிங்கம்  
கார்மேனி நிறத்தவனும், செந்தாமரைக் கண்களை உடையவனுமான, பிரகாசமான சந்திரனைப் போன்ற முகத்தையுடைய நாராயணனே நமக்குப் பறை (பரிசு) தருவான்.

உலகோர் புகழும்படி நாம் அவனை  பஜனை செய்து போற்றுவோம். 
இந்த முதல் பாசுரம், மார்கழி நோன்பைத் தொடங்குவதற்காக ஆண்டாள் தோழியருக்கு அழைப்பு விடுக்கிறாள்  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!