"சினிமா பாணியில் சேஸிங்”.. தாயுடன் சென்ற மகனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கிய போலீசார்... !
திருப்பத்தூர் பேருந்து நிலையம் இன்று (மார்ச் 20, 2026) மாலை ஒரு நிஜமான ஆக்க்ஷன் திரைப்படக் காட்சியைக் கண்டது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே தனது தாயுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சின்னா என்ற வாலிபர், ஆந்திராவில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அனந்தபூர் போலீசார் தனிப்படை அமைத்துச் சின்னாவைத் தேடி வந்தனர்.
போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த சின்னா, தனது தாயுடன் அங்கிருந்து தப்பித் தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்த ஆந்திர மாநிலப் போலீசார், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே சின்னா தனது தாயுடன் நடந்து சென்றபோது, மின்னல் வேகத்தில் சுற்றி வளைத்தனர். தப்பியோட முயன்ற சின்னாவைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பரபரப்பான பேருந்து நிலையப் பகுதியில் திடீரெனப் போலீசார் துப்பாக்கியை எடுத்ததைக் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்ட சின்னாவைத் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதற்கட்ட விசாரணை நடத்திய ஆந்திர போலீசார், பின்னர் அவரைத் தங்களது மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். "ஆந்திராவில் வேலைக்குச் சென்ற இடத்தில் இவ்வளவு பெரிய கடத்தல் கும்பலுடன் சின்னாவுக்குத் தொடர்பு இருந்தது அதிர்ச்சியளிக்கிறது" என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!