undefined

 தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 21...

 

 மார்கழி 21 ... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 21

 வேதங்களும் காத்திருக்கும் திருவடி அழைப்பு

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் விளக்கம் :  

கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பும் பாலைச் சுரக்கும் பசுக்களின் வள்ளல் உரிமையாளன் நந்தகோபனின் மகன் கண்ணன். ஆயர்குலத்தின் காவலன். உலகம் முழுவதும் கருணையைப் பரப்பும் குழந்தை தெய்வம். அந்த கண்ணன் துயிலில் இருக்கிறான்.

வேதங்கள் போற்றும் வலிமையும், வேதங்களாலேயே முழுவதும் அறிய முடியாத பேரருளும் அவனிடம் உள்ளது. உலகத்திற்கு ஒளி காட்டும் சுடராக அவன் நிற்கிறான். அவனை எதிர்த்தவர்கள் எல்லாம் வலிமையிழந்து அவன் வாசலில் வீழ்ந்தனர். திருவடியின் பெருமை அப்படிப்பட்டது.

அதே திருவடியில் விழ நாங்களும் காத்திருக்கிறோம். புகழ் பாடி, பணிந்து, அருள் வேண்டி நிற்கிறோம். எழுந்தருளி எங்கள் குரலைக் கேட்க வேண்டும். ஒரே ஒரு அருள் பார்வை போதும். அதுவே வாழ்வை நிறைவு செய்யும்.

 

மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது பயத்தால். ஆனால் ஆயர்குலப் பெண்கள் அப்படி அல்ல. அவர்கள் அஞ்சுபவர்கள் இல்லை. “வா” என்று அழைத்தால், வந்தே ஆக வேண்டும் என்பது அவர்களின் உரிமை. வர மறுத்தால், அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம் என சிரித்தபடியே சவால் விடுகிறார்கள்.

இது அதிகாரத்தின் அழைப்பு அல்ல. அன்பின் கட்டளை. பயத்தால் தலைவணங்குவோர் ஒருபக்கம். உறவால் உரிமை கொள்பவர்கள் மறுபக்கம். பகவானே வந்தாக வேண்டும் என்கிற தைரியம், ஆயர்குலப் பெண்களின் பக்தியில் இருந்து பிறக்கிறது. அன்புக்கு முன் பரம்பொருளும் அடங்குவான் என்பதே அவர்கள் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையின் உச்சமே ஆண்டாள். மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் ரங்கநாதனை கட்டிப் போட்டாள். தப்ப முடியாத அன்பில் அவனை சிக்க வைத்தாள். இதுவே பக்தியின் உச்சநிலை. முழுமையாக அர்ப்பணித்தால், பகவானே பக்தரின் வசமாகி விடுவான் என்பதே இப்பாடல் சொல்லும் ஆழமான உண்மை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!