undefined

தினம் ஒரு திருப்பாவை ... பாசுரம் 29, 30!

 

மார்கழி 29... தினம் ஒரு திருப்பாவை ... பாசுரம் 29!

அருகில் இருப்பதே  பேரின்பம்!

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


 

பொருள் விளக்கம்:

கண்ணா, அதிகாலையில் உன் பொன்னொளி தாமரைப் பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். எங்களின் வருகைக்கான காரணத்தையும் கேள். பசுக்களை மேய்த்து வாழும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களின் இந்தச் சிறிய விரதத்தை அலட்சியம் செய்யாதே. இது உன் அருளை நாடி வந்த பயணம்.நீ தரும் அணிகலன், பொருள் போன்ற சின்ன வரங்களுக்காக இந்த விரதம் இல்லை. எங்கள் வேண்டுதல் அதைவிட உயர்ந்தது. ஏழேழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கே சேவை செய்யும் வாழ்வைத் தர வேண்டும்.இதுவே எங்கள் முழு ஆசை. இதைத் தவிர வேறு விருப்பங்கள் எங்களுக்குத் தேவையில்லை. அந்த எல்லா ஆசைகளையும் நீயே அழித்து விடு. உன் அருகில் இருப்பதே எங்களுக்கு பேரின்பம். உன் அருளே எங்கள் வாழ்வு.

திருப்பாவை பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்:

 விரத பலன் பெற்ற ஆண்டாள்  

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவன், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவன்—அந்த கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகிய முகம் கொண்டவனை—அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்தனர். பாவை விரதமாக கடந்து அவர்களால் பெரும் பலன் பெற்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்துள்ளார். அந்த பாடல்களில், கண்ணனின் அழகு, வீரமும், அருளும் புகழ்பெற்றுள்ளது.

இதைப் படிக்கும் பக்தர்கள், உயர்ந்த தோள்களைக் கொண்ட, அழகிய கண்களும், செல்வத்திற்கும் அதிபதியான திருமாலின் ஆசியையும் அனுபவித்து, எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு மற்றும் இன்பமுடன் வாழ்வார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!