undefined

தினம் ஒரு திருப்பாவை ... பாசுரம் 5 ! 

 

திருப்பாவை : பாசுரம் 5

 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள் விளக்கம் :

கண்ணன் நினைவே பாவம் கரைக்கும்

வியப்பூட்டும் செயல்களால் உலகை மகிழ்வித்தவன் கண்ணன். மதுராவில் அவதரித்த அவன், தூய யமுனை கரையில் விளையாடி மகிழ்ந்தான். ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்காய் திகழ்ந்தான். தேவகி தாயின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவன். யசோதையின் கயிறு கட்டிய தழும்பும் அவன் லீலைகளின் சாட்சி.

அந்த கண்ணனை நினைத்து தூய்மையாக நீராட வேண்டும். மணம் வீசும் மலர்களுடன் அவனை காண மனம் போதுமானது. அவன் புகழ் பாடினாலே சரி. செய்த பாவங்களும், செய்கிற பாவங்களும் தீயில் விழும் தூசுபோல் அழியும். கண்ணன் நினைவே பாவங்களை கரைக்கும் மருந்து.

ஒரு தாய், பிள்ளையால் போற்றப்பட வேண்டும். தேவகி தாய்க்கு அந்த பெருமை கிடைத்தது. “இவனைப் பெற நான் என்ன தவம் செய்தேன்” என அவள் மகிழ்கிறாள். பிள்ளைகள் பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும். இதுவே இந்த கருத்தின் மையம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!