தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 7!
திருப்பாவை பாசுரம் 7:
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பொருள் விளக்கம்:
நல்வழிப்பட நாராயணன் நாமம் கேள்!
அறிவில்லாதவளே, இன்னும் தூங்குகிறாயா? ஆனைச்சாத்தன் எனப்படும் வலிய குருவிகள் கீச்சிடும் சத்தம் எழுந்துவிட்டது. அவை தங்கள் துணையுடன் பேசும் இனிய ஒலியும் கேட்கிறது. மணம் வீசும் கூந்தலுடன் ஆயர்குலப் பெண்கள் தயிர் கடையும் ஓசை பரவுகிறது. கழுத்திலுள்ள தாலிகள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்கின்றன. இத்தனை சத்தங்களும் உன் காதில் விழவில்லையா?
எல்லோருக்கும் தலைமையேற்று அழைப்பதாகச் சொன்னவளே, இப்போது என்ன மௌனம்? நாங்கள் நாராயணன், கேசவன் புகழ் பாடுகிறோம். அந்த பாடல் உன் வீட்டுக்குள் கேட்கிறது. இருந்தும் தூக்கம் விலகாதது ஏன்? பிரகாசமான முகம் கொண்டவளே, எழுந்து வா.
பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. அதில் கேசவன் என்ற நாமம் சிறப்பு. அதை ஏழு முறை சொல்லி நாளை தொடங்கினால் தடைகள் விலகும் என நம்பிக்கை. கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்ற பொருள். அந்த நாமத்தை நினைத்து கதவைத் திற. நாள் நல்வழியில் செல்லும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!